• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாக்குதல் நடத்திய சதிகாரர்கள் எங்கு ஓடி ஒளிந்தாலும் தப்ப முடியாது – பிரதமர் மோடி

February 16, 2019 தண்டோரா குழு

புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய சதிகாரர்கள் எங்கு ஓடி ஒளிய முயற்சி செய்தாலும் கண்டுபிடித்து தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சிஆர்பிஎப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 பேருந்துகளில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன், வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து வீரர்கள் இருந்த பேருந்து மீது பயங்கரமாக மோதினான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய மற்றும் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் ((Yavatmal)) பிரதமர் மோடி பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் பிரதமர் மோடி வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,

புல்வாமா தாக்குதலால் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள துயரத்தையும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது என்றார்.

மேலும், திவாலாகும் நிலையில் உள்ள ஒரு நாடு, பயங்கரவாதத்தின் இரண்டாவது பெயராக மாறியிருப்பதாக பாகிஸ்தானை அவர் மறைமுகமாக சாடினார்.
சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எவ்வளவு தான் ஒளிந்து கொள்ள முயற்சித்தாலும், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க