• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீது 2 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு

December 20, 2018 தண்டோரா குழு

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீது 2 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை தி. நகரிலுள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக கூறி விஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் தயாரிப்பாளர்கள் சங்கம் அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து விஷால் தரப்பை சேர்ந்த கதிரேசன் என்பவர் சமரசம் செய்ய முயற்சித்தார். இதில் சமாதானமடையாத தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர், கதிரேசன் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக்கூறி தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டனர்.

இதற்கிடையில், இன்று காலை சங்க அலுவலகத்திற்கு நடிகர் விஷால் சென்றார். அப்போது போலீசார் அவரை தடுத்தனர். அப்போது விஷால் அந்த பூட்டை உடைக்க முற்பட்டபோது போலீசார் தடுத்தனர். இதனால் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்நிலையில், நடிகர் விஷால் மீது பாண்டிபஜார் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய சொத்து விவகாரத்தில் அமைதியை குலைக்க முயற்சித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இன்று காலை கைது செய்யப்பட்ட விஷால் தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க