• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் உள்ள கோவில்களில் ரூ.6 கோடி பணம், நகை சிறப்பு அலங்காரம்

April 14, 2023 தண்டோரா குழு

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடபட்டு வருகிறது. இந்நாளில் காலையிலேயே சித்திரை கனியான பழங்களை பார்த்து கண்விழிப்பது என்ற வழக்கத்துடன் துவங்குகிறது. இதேபோல் கோவில்களில் சிறப்பு அலங்காரம், பூஜை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. சித்திரை திருநாளான இன்று இதேபோல் கோவை காட்டூர் பகுதியிலுள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 83வது சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடபட்டு வருகிறது.

இக்கோவிலில் சித்திரை முதல்நாளான இன்று 100,200,500,2000 ரூபாய் நோட்டுக்கள் என சுமார் ரூ.6கோடி மதிப்பிலான பணத்தை கொண்டும் தங்க, வைர ஆபரணங்களை கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜை செய்யபட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

இதேபோல் கோவையிலுள்ள பல்வேரு கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், பூஜையுடன் வழிபாடு செய்து தமிழ் புத்தாண்டு கொண்டாடபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க