• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியலை வெளியிட்டார் துணைவேந்தர் குமார்

June 26, 2019 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்ட படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு முடிந்தவுடன் வேளாண் படிப்பிற்கான கலந்தாய்வு துவங்கும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரி மற்றும் இணைப்பு கல்லூரிகளில் 2019-20ம் ஆண்டு இளநிலை பட்ட படிப்பில் சேர்வதற்காம இணையதள மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், இன்று தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் வெளியிட்டார். இதில் 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று கன்னியாகுமரியை சேர்ந்த ரேவதி முதலிடத்தையும், 198.25 கட் ஆப் மதிப்பெண் பெற்று புதுக்கோட்டையை சேர்ந்த சிவாலினி இரண்டாம் இடத்தையும் , தஞ்சாவூரை சேர்ந்த ஆலன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை வேந்தர்,

10 பட்ட படிப்பில் உள்ள 3095 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு 51, 876 விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. இதில் 41, 590 ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளைவிட இந்தாண்டு அதிகளவு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதாகவும், இது மாணவர்க்கு வேளாண் படிப்பு மீதான் ஆர்வம் அதிகரித்தை காட்டுகிறது எனவும் தெரிவித்தார். குறிப்பாக பி.எஸ்சி. அக்ரி படிப்பிற்கு மாணவர்களிடம் அதிகளவு வரவேற்ப்பு இருப்பதாகவும், ஒரு இடத்திற்கு 70 பேர் போட்டி போடும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மாணவர்களிடையே கடுமையான போட்டு நிலவும் என தெரிவித்தார். வேளாண் பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு அதிகரித்ததின் காரணமாக இம்முறை மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு முடிந்த 10 நாட்களில், வேளான்படிப்பிற்கான கலந்தாய்வு துவங்கும் எனவும் அப்போது தெரிவித்தார்.

மேலும் படிக்க