• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் நடத்தும் கோடைகால கண்காட்சி

February 3, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் முதல் முறையாக நிதி திரட்டுவதற்காக ஒரு கோடைகால கண்காட்சியை நடத்துகிறது. கோடை கால மாதங்களில் அணிந்தும் மகிழும் வகையிலான ஆயத்த ஆடைகள் மற்றும் பிற பொருட்களை இடம் பெற்றுள்ளன. இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி கோவை சிங்காநல்லூர் பகுதி பெர்க்ஸ் பள்ளி ஆர்ச் ரோடு பகுதியில் அமைந்துள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ் வளாகத்தில் நடைபெறுகின்றது.

துவக்க விழாவிற்கு கோவை வருமானவரி துறை முதுநிலை ஆணையாளர் பூபால் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கிவைத்தார். மேலும் விழாவில் தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் முன்னாள் தலைவர் சபிதா சந்திரன் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு கைவினைஞர்கள் தயாரிப்பிலான பொருட்களும் உள்ளன. இளைய தலைமுறையினர், கவனமுடன் தயாரித்த, நிலையான வேலைப்பாடுகள் கொண்ட புதுமையான வடிவமைப்பிலான ஆடைகள் அதிக அளவில் காட்சியில் இடம் பெறுகின்றன.

பல்வேறு விதமான வீட்டு அலங்கார பொருட்கள், நகைகள் விற்பனையில் உள்ளன. பசியோடு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவளிக்க கொங்கு நாட்டு சமையல், சுஷி, சாலட் பவுல், சாக்லேட், பட்டிசெரியே, ஜூஸ், சான்ட்விச், ஐஸ்க்ரீம் மற்றும் உள்ளுர் சுவையான சிற்றுண்டிகளும் இடம் பெறுகின்றன.

மேலும் படிக்க