• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழருடைய சாதனையை உலகளவிற்குக் கொண்டு சென்ற அருணாச்சலம் முருகானந்தத்திற்கு என் வாழ்த்துக்கள் – ஸ்டாலின்

February 25, 2019 தண்டோரா குழு

தமிழருடைய சாதனையை உலகளவிற்குக் கொண்டு சென்ற அருணாசலம் முருகாந்தத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் , மலிவு விலையில் நாப்கின்களை அறிமுகப்படுத்தினார். இவரது மலிவு விலை நாப்கின்கள் மற்றும் இந்திய பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதிகளை எடுத்துச் சொல்வதை மையமாகக் கொண்டு ‘பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ எனும் பெயரில் கடந்த ஆண்டு ஆவணப்படம் எடுக்கப்பட்டது. கோவை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டது. இதில் முருகானந்தமும் நடித்து இருந்தார். இப்படத்தினை குனேட் மோங்கா தயாரித்திருந்தார்.

இந்நிலையில், 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆவண படத்திற்கான ஆஸ்கர் விருது பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ படத்திற்கு கிடைத்துள்ளது. இதனால் அருணாசலம் முருகாந்தத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, தமிழருடைய சாதனையை உலகளவிற்குக் கொண்டு சென்ற அருணாசலம் முருகாந்தத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,

ஆஸ்கர் விருது பெற்றிருப்பது பெருமைக்குரிய செய்தி. எளிய மக்கள், குறிப்பாக மகளிர் மீது அக்கறை கொண்டு செயலாற்றிய தமிழர் அருணாசலம் முருகானந்தம் அவர்களுக்கும், அந்தத் தமிழருடைய சாதனையை உலகளவிற்குக் கொண்டு சென்ற படக்குழுவினருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க