September 7, 2018
தண்டோரா குழு
தமிழக மக்களின் உதவிகளை ஒரு போது மறக்க மாட்டோம் கேரள உயர் கல்வி துறை அமைச்சர் கே.டி.ஜெலில் கோவையில் உறுக்கமான பேட்டியாத்துள்ளார்.
கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் மற்றும் நூர்சேட் பீடி சார்பாக கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதனை கேரள உயர் கல்வி துறை அமைச்சர் கே.டி.ஜெலில் கோவைக்கு வந்து நேரடியாக பெற்று கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கேரளா பாதிப்பிற்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உதவி கரம் நீட்டி உள்ளது. மேலும் தமிழக மக்கள் பெரிய அளவில் உதவி செய்துள்ளனர். தமிழ் பள்ளி மாணவ, மாணவியர்கள் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு நிதி சேகரித்து கொடுத்துள்ளனர். தமிழக பள்ளி நிர்வாகமும் நேரடியாக நிதி வழங்கி உள்ளனர். தமிழக மக்களின் இந்த உதவிகளை எப்போதும் மறக்க மாட்டோம் என உறுக்கமாக தெரிவித்தார்.
மேலும் கேரளாவில் எலி காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஒரே நேரத்தில் பேரிடர் பாதிப்பு சீர் செய்யும் பணி, மற்றும் எலி காய்ச்சல் பராவல் தடுப்பதற்கான இரு பணிகளையும் கேரள அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கேரளா முழுவதும் அனைத்து இடங்களிலும் எலி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக மக்களுக்கு மாத்திரைகள், வழங்கபடுகிறது. எலி காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வெறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு துரிதமாக செயல்படுத்தி வருகிறது எனக் கூறினார்.