• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு ஓரளவு தளர்த்தியுள்ள நிலையில் கோவையில் ஓரளவு கடைகள் திறப்பு

May 4, 2020 தண்டோரா குழு

ஊரடங்கு கட்டுப்பாட்டை தமிழக அரசு ஓரளவு தளர்த்தியுள்ள நிலையில் இன்று காலை முதலே கோவை டவுன்ஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சமூக இடைவெளியை பின்பற்றி கூடினர்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த 3-வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு தளர்த்தியுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதேபோல மளிகைக் கடைகள், மொத்த வியாபார கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகளில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தொடர்ந்து பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணியவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க