• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தமிழகத்தில் 17 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு’

May 25, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிதாக 805 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 93, தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யபட்டவர்கள் 712.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 549 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 10,576ல் இருந்து 11,125 ஆக உயர்ந்தது. இன்று ஒருநாளில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 118- ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 407 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,731 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க