• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

February 16, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்திரவிட்டிருந்தார். மேலும், அதிகாரிகளை மாற்றம் செய்து, பட்டியலை வரும் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பவும் உத்திரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளது. அதன்படி, வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலச்சந்திரன், பதிவுத்துறை ஐஜி ஆகவும் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை ஆட்சியராகவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், இந்திய மருத்துவ இயக்குநராகவும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை சிறப்பு செயலாளராகவும் திருச்சி மாவட்ட ஆட்சியராக எஸ்.சிவராசுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்னர். அதைப்போல்நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையராகவும்
கோவை மாநகராட்சி கே.விஜயகார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரி நாகரஜனுக்கு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க