• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ரூ.5,010 கோடியில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி

March 6, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் ரூ.5,010 கோடியில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட விழா தொடங்கியது. பிரதமர் மோடி, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடிக்கு நினைவு பரிசை வழங்கிய தலைவர்கள், செங்கோலையும் பரிசாக அளித்தனர்.பிரதமர் மோடிக்கு நடராஜர் சிலையை நினைவு பரிசாக அளித்தனர்.

அப்போது, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்ட எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்ததுடன், ஈரோடு – கரூர், திருச்சி – சேலம் மற்றும் கரூர் – திண்டுக்கல் இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ரூ.5,010 கோடியில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். காணொலி காட்சி மூலம் 4 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் படிக்க