• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மே 31க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை : மாநில தேர்தல் ஆணையம் உறுதி

February 28, 2019 தண்டோரா குழு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை மே 31 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017 நவம்பர் 17 ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர்களுக்கு எதிராகவும் தி.மு.க. தரப்பில் R.S.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், வரும் மே மாதம் 31ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தில் 2016 அக்டோபரில் 2
கட்டங்களாக நடத்தப்பட்டு இருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க