• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைக்கும் – தமிழிசை சவுந்திரராஜன்

December 29, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைக்கும் என தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலித்து, தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.நாட்டில் மிகப்பெரிய பெருளாதார வெற்றியை மோடி அரசு பெற்றுத்தந்துள்ளது. சீனாவை விட இந்தியாவிற்கு அதிக அளவு அன்னிய முதலீடு வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அக்கறை கொண்டு மத்திய அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறது. தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைக்கும், ஜனவரி மாதம் முதல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க