• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்திக்கும் சூழல் இல்லை – தமிழிசை சவுந்திரராஜன்

February 9, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்திக்கும் சூழல் இல்லை எனவும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

ஒவ்வொரு முறையும் பிரதமரின் வருகையின் போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிரதமரின் வருகையை ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்நோக்குகிறது. பாஜக அரசு மீது விமர்சனங்களை வைக்க முடியாத எதிர்கட்சிகள் ரபேல் என்ற செத்த குதிரையை வைத்து அரசியல் செய்துவருகிறது. பிரதமரை விமர்சிக்க மமதா பானர்ஜிக்கு என்ற தகுதியும் இல்லை.தமிழகத்தில் 6 மாதங்களுக்கு முன்பே பாஜக தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டது. பிரதமர், பாஜக தேசிய தலைவர், அமைச்சர்களின் வருகை பாஜகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி அமைத்து தான் போட்டி என பாஜக ஏற்கனவே அறிவித்துள்ளது. கமலஹாசன் ஆறு மாதங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்தவர் என்பதால் பாஜக ஆட்சியை மதிப்பிட முடியாது இவ்வாறு அவர் கூறியுள்ளார்

மேலும் படிக்க