• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்7-ம் தேதி திறக்கப்படும்

May 26, 2017 தண்டோரா குழு

கோடை வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்7-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பை ஒரு வாரம் காலம் ஒத்திவைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கோடை விடுமுறை முடிந்து வரும் ஜீன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பள்ளிகள் வரும் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“ கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.அதன் பின் ஒரு வாரத்தில் மாணவ,மாணவியர்களுக்கு பஸ் பாஸ் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றார்.

மேலும் படிக்க