September 7, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் கூறியுள்ளார்.
குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோதனை தொடர்பாக இதுவரை 7 கைது செய்யப்ட்டுள்ளனர். டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
குட்கா புகார் கூறப்பட்ட காலத்தில் நான் பணியில் இல்லை, சிபிஐயின் எஃப்.ஐ.ஆரில் என் பெயர் இல்லை. குட்கா விவகாரத்தில் 2016 ஏப்ரல், மே, ஜூனில் சோதனை நடந்தது. நான் பதவிக்கு வந்தது செப்டம்பரில்தான். குட்காவிவகாரத்தில் அடிப்படை ஆதாரம் இல்லாமல் என் மீது புகார் கூறப்பட்டுள்ளது.33 ஆண்டு கால பணியில் நான் எந்த தவறும் செய்யவில்லை.தி.மு.க வழக்கறிஞர் தனது மனுவில் எனது பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. குட்கா ஊழலில் நான் ஆணையராக இருந்த போது குட்கா ஊழல் தொடர்பான வதந்திகள் பரப்பபட்டது. குட்கா விவகாரத்தில் காவல் ஆணையர்கள் நிலையில் சிலரது பெயர்கள் அடிப்பட்டதும் என் கவனத்திற்கு வந்ததுகுட்கா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஏற்கெனவே நான் அரசிடம் அறிவுறுத்தினேன்.குட்கா புகார் தொடர்பாக நான் யாரையும் சந்திக்கவில்லை, என்னையும் யாரும் வந்து சந்திக்கவில்லை. முன்னாள் காவல் ஆணையருக்கு எதற்காக பணம் கொடுக்கப் போகிறார்கள்? சட்டவிரோத செயல்கள் குறித்து உளவுத்துறை தகவலளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இணை ஆணையர் ஜெயக்குமார் மிகவும் மோசமாக செயல்படுவதாக ஏற்கெனவே அறிக்கை அளித்தேன்.தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இருக்கின்ற அனைத்து உண்மைகளின் அடிப்படையில் பேசுகிறேன். குட்கா விவகாரம் விசாரணையில் இருப்பதால் நான் சந்திக்கும் பிரச்சனையை கூற விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.