• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை : வானிலை மையம் தகவல்

December 3, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

இன்று தென்மேற்க வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வரும் 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழைக்கும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. கனமழையை பொறுத்தவரையில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் எதிர்பார்க்கலாம்.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க