• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் நடப்பது பாஜக வின் B – team ஆட்சி – காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்

September 14, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் நடப்பது பாஜக வின் B – team ஆட்சி என காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்த்ததில் பா.ஜ.க அரசு ஊழல் செய்து இருப்பதாக கூறி கோவையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகே துவங்கிய ஊர்வலம் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நிறைவடைத்தது.இதனையடுத்து தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் விமான வடிவிலான பலூன்களை கையில் ஏந்தியபடியும் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடனும் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் மற்றும் ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் முகுல்வாசினிக் மற்றும் சஞ்சய் தத் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,

ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்ப்ந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.இதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தற்போதைய மத்திய அரசு வீழ வேண்டிய அரசு. நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்தி இருக்கிறது.
தமிழகத்தில் நடப்பது பாஜக வின் B – team ஆட்சி. அதனால் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகில்வாஸ்னிக்,

பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றம் மூலம் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசிற்கும், பெட்ரொலிய நிறுவனங்களுக்கும் லாபம் கிடைத்துள்ளது. இது மக்களிடம் இருந்து சுரண்டப்பட்டுள்ளது. ரபேல் விமானம் ஒப்பந்த்தில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. 526 கோடிக்கு வாங்க வேண்டிய விமானத்தை 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.

மேலும், துவங்கி 10 நாட்களே ஆன தனியார் நிறுவனத்திற்கு விமான ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முரண்பாடான தகவல்களை தெரிவித்து வருகின்றார் என்றார்.

மேலும் படிக்க