• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! – புதிய தளர்வுகள் என்னென்ன ?

July 30, 2020

ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என மருத்துவக் குழுவினரின் ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் என்ன ?

ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

சென்னையில் ஆகஸ்ட் 1 முதல் சென்னையில் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

சென்னையில் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி.

சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவருந்த அனுமதி

ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10ஆயிரத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி

மாநகராட்சி பகுதிகளில் உள்ள எந்த கோவில், மசூதி, தேவாலயங்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை

சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் இரவு 7மணி வரை நீட்டிப்பு

சென்னையில் மற்ற கடைகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் இரவு 7மணி வரை நீட்டிப்பு

அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற என அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதி

சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் உள்ள சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களை திறக்க அனுமதி

பிற மாவட்டங்களில் ஆண்டு வருமானம் ரூ.10ஆயிரத்திற்கு குறைவான வருமானம் கொண்ட கோவில்கள், தேவாலயம், மசூதிகளை திறக்கலாம்

பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்கிற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்

நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு தொடரும்

ரயில், விமானப்போக்குவரத்து விஷயத்தில் தற்போதைய நடைமுறை தொடரும்

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள், வருபவர்கள் ஈ பாஸ் பெறுவது ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயம்

மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினம் கொண்டாட அனுமதி

மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் பேருந்து போக்குவரத்திற்கு தடை தொடரும்

பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை

மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை தொடரும்

திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்

மெட்ரோ ரயில், மின்சார ரயில்களுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும்

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமானப்போக்குவரத்திற்கான தடை தொடரும்

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும்

ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும்

உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தளங்களுக்கு வெளியூர் சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை தொடரும்

தமிழகத்தில் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்

தற்போதைய கட்டுப்பாடுகளில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.

மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க