• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கோவை உட்பட 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

March 4, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் வரும் 6, 7ம் தேதிகளில் 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் உள் தமிழகத்தில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல, கடலோர மாவட்டங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வரும் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் வேலூர், கரூர், திருவண்ணாமலை, கோவை, ஈரோடு, திண்டுக்கல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருப்பூர் மாவட்டங்களிலும் அனல் வீசும் சில இடங்களில் இயல்பை விட 7 டிகிரி செல்சியல் அதிக வெப்பம் பதிவாகும். என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்ப 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் படிக்க