• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் ஏப்ரல் 1 முதல் ஒத்துழையாமை போராட்டம்

March 18, 2020

என்.பி.ஆர்க்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஏப்ரல் ஒன்று முதல் தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் தொடர் ஒத்துழையாமை போராட்டம் நடத்த உள்ளதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் எஸ்.டி.பி.கட்சி வர்த்த அணியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதன் மாநில தலைவர் நெல்லை முபாரக் ,என்.பி.ஆர். ஐ க்கு எதிராக வரும் ஏப்ரல் 1 முதல் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் தொடர் ஒத்துழையாமை போராட்டம் நடத்தப்படும் என்றும்,என்.
பி.ஆரை நிறுத்தி வைத்ததால் மட்டும்போதாது என்றும் அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

கோவையில் ஷாகின்-பாக் நிறுத்தி வைக்கப்படதற்கு காரணம் கொரோனா வைரிஸின் தாக்கம் காரணமாக சமூக அக்கறையோடு எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறினார்.மேலும் இதற்கு இந்து அமைப்புகள் போராட்டங்கள் மூலம் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுவிட்டது என்றும் இந்து அமைப்புகளுக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி கூறிவருவதோடு, சமூகத்தில் வன்முறையை தூண்டக்கூடிய வகையில் பேசி வருவதாக கூறினார்.

மேலும் என்.பி.ஆர்.என்ஆர்.சி உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் உலக அளவில் கொரனோ வைரஸின் தாக்கதால் உலக பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது..இந்த சூழலி்ல் நிதி அமைச்சர் பெட்ரோல் டீசல் விலையை மூன்று ரூபாய் வரியை உயர்த்தி உள்ளார்.இது மக்கள் மீது போட்டப்பட்டுள்ள மிகப்பெரிய சுமை எனவும் உடனடியாக கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு குறைக்க வேண்டும் என்றும் கூறினார்.கோவையில் கடந்த சில நாட்களாக ஒரு பதட்டமான சூழல் உருவாகி இருப்பதற்கு முக்கிய காரணம் இந்து அமைப்புகள் காரணம் காடேஸ்வரா சுப்ரமணியம் போன்ற தலைவர்கள் கோவையில் வன்முறையை கட்டவிழ்த்து விட உள்ளதாக திட்டமிட்டுள்ளார்.இதன் விளைவாகத்தான் கோவையில் கடந்த சில நாட்களாக முஸ்லீம் தலைவர்கள் மீதும் பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இவை அனைத்தும் வன்முறை தூண்ட வேண்டும. என்ற எண்ணதோடு நடத்தப்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ள நெல்லை முபாரக் இந்த விஷயங்கள அனைத்தும் காவல்துறைக்கு நன்றாக தெரியும் என்றும் எனவும் ஒருதலைபட்சமாக நடப்பதன் காரணமாத்தான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரி பணியடை நீக்கம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் கோவையில் நடைபெற்ற அனைத்து சம்பவங்க்ள காவல் துறையின் தோல்வியை காட்டுவதாக தெரிவித்தார்.வரும் ஏப்ரல் முதல் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் உள்ளிட்டோர் அனைத்து வங்கி கணக்குகளை மூட உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்

மேலும் படிக்க