• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இன்று புதிதாக 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 18 பேர் உயிரிழப்பு !

June 7, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று புதிதாக 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று புதிதாக 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,497. பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,156 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 18 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இன்று ஒரேநாளில் 604 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 16,999 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 14,396 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 16,275 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 5,92,970 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 76 (அரசு 44 + தனியார் 32) பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

மேலும் படிக்க