தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,023 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த எண்ணிக்கை 1,04,027 ஆக உயர்ந்தது. இதனால், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களில் 108 பேர் உயிரிழந்தனர்.இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,349 ஆக உள்ளது. அதேசமயம் இன்று மட்டும் 6,501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,08, 784 ஆக அதிகரித்தது.தமிழகத்தில் இன்று 55,122 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.இது ஒருநாளில் அதிகபட்ச பரிசோதனை ஆகும். இதுவரை மொத்தம் 28,92,395 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு
’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ மெகா டவுன்ஷிப் திட்டம் கோவையில் ஜி ஸ்கொயர் குழுமம் தொடக்கம்
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்