• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 49 பேர் உயிரிழப்பு

June 18, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று புதிதாக 2,141 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று புதிதாக 2,141 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 1,373 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தில் மட்டும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோர் 2,091 பேர்.வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மொத்தம் 1,017 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 28,641 பேர் குணமடைந்துள்ளனர்.நேற்று 25,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று 26,736 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 8,00,443 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 23,065 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் படிக்க