• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 2532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

June 21, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 2532 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று மேலும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 52 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 59,377 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1493 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று சென்னையில் 43 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், திருவள்ளூர் மற்றும் விழுப்புரத்தில் தலா 2 பேரும், திருநெல்வேலி மற்றும் திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 32,754 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 25,863 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 86 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 31,401 மாதிரிகள் சோதனையிடப் பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 8,92,612 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க