• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனியார் இருசக்கர டாக்சிகளை அனுமதிக்க கூடாது – ஆட்டோ ஓட்டுனர்கள் அரசுக்கு கோரிக்கை

April 22, 2019 தண்டோரா குழு

தனியார் இருசக்கர டாக்சிகளை அனுமதிக்க கூடாது என ஆட்டோ ஓட்டுனர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால் டாக்சி உள்ளிட்டவை உள்ளன. ஏற்கனவே சில கால் டாக்சிகளில் ஆட்டோவை விட கட்டணம் குறைவு என்பதால் மக்கள் ஆட்டோவிற்கு பதில் கால் டாக்சிகளையே அதிக அளவு பயன் படுத்தி வருகின்றனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் அரசிடம் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் ராபிட்டோ இருசக்கர டாக்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் மேலும் கேள்வி குறியாகும் அதனால் தனியார் இருசக்கர டாக்சிகளுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும். மேலும் ஓன் போர்டு வாகனங்களை பொது மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என்பது மோட்டார் வாகன சட்டம் என்று கோவை ஆட்டோ ஓட்டுனர்கள் கூறுகின்றனர்

மேலும் படிக்க