September 5, 2018
தண்டோரா குழு
அனுமதி எண் பெற்ற பிறகே போஸ்டர் பேனர்களை வைக்க வேண்டும் என ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுபாடுகள் விதித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மன்றத்துக்கு பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். அண்மையில் மக்கள் மன்றத்தில் சேர புத்தக வடிவில் பல்வேறு விதிகள் விதித்திருந்தார். இந்நிலையில்,தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் போஸ்டர், பேனர், பதாகை வைக்க ரஜினிகாந்த் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளார்.
அதன்படி, பேனர், போஸ்டர்களை தலைமை மன்றத்திற்கு அனுப்பி அனுமதி எண் பெற்ற பின்னரே, அதனை வைக்க வேண்டும். மாநகரத்துக்கு உட்பட்ட மண்டல நிகழ்வில், மாநகர செயலரை விட மண்டல நிர்வாகி படம் சிறியதாக இருக்க வேண்டும் என ரஜினி தெரிவித்துள்ளார்.