• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தந்தை வீட்டு வாடகை கொடுக்காததால் 8 வயது மகள் மீது மின்சாரம் பாய்ச்சிய வீட்டு உரிமையாளர் கைது

January 3, 2019 தண்டோரா குழு

மதுரையில் தந்தை வீட்டு வடைகை கொடுக்கவில்லை என வயது மகள் மீது மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்தியதாக வீட்டு உரிமையாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் கணேஷ் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் 8 வயது மகளுடன் வாடகைக்கு வசித்து வந்தார். மார்க்கெட்டிங் வேலை செய்யும் கணேஷ் குமார் கடந்த 4 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த விட்டு உரிமையாளர் மணிவண்ணன் வாடகை தராவிட்டால் வீட்டைக் காலி செய்யுமாறு கணேஷ் குமாரை வற்புறுத்திவந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பணிநிமித்தம் காரணமாக நேற்று கணேஷ் குமார் வெளியூர் சென்றுயுள்ளார். மனைவி ராஜலட்சுமியும் கடைக்குச் சென்று கடைக்குச் சென்று வீடு திரும்புகையில், தீக்காயங்களுடன் குழந்தை அழுது கொண்டிருந்தார். அவர் குழந்தையுடம் கேட்ட போது வீட்டு உரிமையாளர் மணிவண்ணனின் மகனான சந்தோஷ் தனது உடலில் மின்சாரத்தை பாய்ச்சி துன்புறுத்தியதாக சிறுமி கூறியுள்ளார். உடனே காயம்பட்ட சிறுமியை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,வாடகை கொடுக்காத காரணத்தால் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமி மீது மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்தியதாக திலகர் திடல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் சிறுமி மீது மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்தியதாக வீட்டு உரிமையாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க