• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லி மருத்துவ கல்லூரியில் தமிழக மாணவர் மர்ம மரணம்

January 17, 2018 தண்டோரா குழு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ள யூசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த செல்வமணி தனலட்சுமி தம்பதியரின் மகன்
சரத் பிரபு. கோவை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ள  யூசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.டி. என்ற மருத்துவப் பட்டமேற்படிப்பை படித்துவந்தார்.

இந்நிலையில், நண்பர்களுடன் விடுதியில் தங்கி பட்டமேற்படிப்பு முதலாம் ஆண்டு படித்துவந்த சரத் பிரபு இன்று காலை கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிதனர்.பின்னர் அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த டெல்லி போலீசார் சரத் பிரபுவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த 2016-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில்
மேற்படிப்பிற்காக சேர்ந்த திருப்பூரை சார்ந்த சரவணன்  விஷ ஊசி போட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க