• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி மார்ச் 1 முதல் உண்ணாவிரதம் – கெஜ்ரிவால் அறிவிப்பு!

February 23, 2019 தண்டோரா குழு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முழு மாநில அந்தஸ்து கோரி வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,

‘மொத்த நாட்டுக்கும் ஜனநாயகம் இருக்கிறது. ஆனால் அது டெல்லிக்கு இல்லை. தேர்தல் மூலம் மக்கள்தான் டெல்லி அரசைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், டெல்லி அரசுக்கு எந்தவித உரிமையும் இல்லை. எனவே, மார்ச் 1 முதல் முழு மாநில அந்தஸ்து கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்’. டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கொடுக்கப்படும் வரை நான் உண்ணாவிரதம் இருப்பேன். நான் சாகவும் தயாராக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரன் பேடியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போது அதனை தொடர்ந்து டெல்லி முதல்வர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க