• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெங்கு வழக்கில் ஓராண்டுக்கு பின் அறிக்கை தாக்கல் செய்த சென்னை மாநகராட்சி – உயர்நீதிமன்றம் கண்டனம்

December 4, 2018 தண்டோரா குழு

சென்னை மாநகராட்சியில் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாநகராட்சி சார்பில் ஓராண்டுக்கு பின் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சியின், இந்த காலதாமதத்திற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையின்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காக கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டதாக கூறினார்.கால்வாய்கள் தூர்வாரவும், அதற்காக எந்திரங்கள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை குறிப்பிட்டார். இதுதவிர பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கூட்டம் நடத்துகிறீர்கள்; நிதி ஒதுக்குகிறீர்கள்; அதன் மூலம் ஆக்கப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து 18ம் தேதிக்குள் தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நேரிடும்’ என எச்சரித்தனர். மேலும் வழக்கு விசாரணையை 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க