July 20, 2017
தண்டோரா குழு
டெங்குவை ஒழிக்காவிட்டால் ஒதுங்கி கொள்ளுங்கள் என தமிழக அரசுக்கு கமல் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் சமீபகாலமாக அரசியல் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கடந்த வாரம் கமல் கருத்து தெரிவித்தார். அதற்கு பின் அமைச்சர்களும் கமலுக்குமிடையே கருத்து யுத்தம் ஆரம்பமானது. இதற்கிடையில், நேற்று கமல் நான் என்றோ அரசியலுக்கு வந்து விட்டேன். ஊழல் குறித்த விவரங்களை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள் என்று டுவிட்டரில் கேட்டுக்கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில், இன்றும் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,பள்ளிப் படிப்பை முடிக்காதவன் ” நீட்” ன் கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது.அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம்!என தெரிவித்துள்ளார்.