• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டி20 ரசிகர்களுக்கு போட்டிகளைக் கண்டுகளித்தபடியே விளையாடி பரிசுகளை வெல்ல ‘வி’ அழைப்பு !

April 12, 2021 தண்டோரா குழு

டி20 ரசிகர்களுக்கு கிரிக்கெட்டின் உற்சாகத்தைக் கொண்டாடும் வகையில் போட்டிகளைக் கண்டுகளித்தபடியே விளையாடி பரிசுகளை வெல்ல வி அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு கொண்டாட்டம் தொடங்கியுள்ள நிலையில், விவோ ஐபிஎல்2021 போட்டியில் இணை ஊடக பங்குதாரராக ஆதரவை வழங்கிவரும் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு பிராண்டான வி, சேர்ந்து விளையாடுவோம் எனும் புகழ்பெற்ற விளையாட்டு கருத்தாக்கத்தின் அடிப்படையில் அனைவரையும் கவர்ந்திழுக்கும், பெரும் பலன்களை முயற்சியொன்றை அறிவித்துள்ளது.

அதாவது, வரும் 52 நாட்களிலும், 60 போட்டிகளிலும் டி20 கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து ரசித்தவாறே தனியாகவோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ விளையாடி, களிப்புற்று, பல பரிசுகளை அள்ளலாம். ஏப்ரல் 9-ம் தேதி முதல் மே 30, 2021 வரை, வி பாருங்க, விளையாடுங்க, ஜெயிச்சிடுங்க எனும் ஆன்லைன் கேமிங் திட்டத்தை தனது வாடிக்கையாளர்கள் பங்குபெறும் வகையில் வழங்குகிறது வி. இதில் பங்கேற்று பம்பர் போட்டி பரிசை வெல்வது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் தினமும் பரிசுகளை அள்ளலாம்.

டிஸ்னி ஹாட்ஸ்டார் உடன் இணைந்து ஐபிஎல் டி20 போட்டிகளை வாடிக்கையாளர்கள் நேரடியாக மொபைல் போன்களில் எங்கிருந்தவாறும் பார்க்கும் வாய்ப்பு தரப்பட்டதையடுத்து, வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் அனைத்து வி வாடிக்கையாளர்களும் (ப்ரீ-பெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட்) பதிவு செய்து, இதனை விளையாட முடியும். இதற்காக, வி செயலியின் முகப்பு பக்கத்தில் ஒருமுறை பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கென்று வேறு எந்த நிபந்தனைகளும் இல்லை. ஒவ்வொரு விளையாட்டிலும் 4 நிலைகள் ப்ரீ-மேட்ச், ப்ளே அலாங், ஸ்ட்ராடஜிக் டைம்-அவுட் அண்டு பவர் ப்ளே, ஒவ்வொரு நாள் போட்டியின் அடிப்படையிலும் தினசரி சவால்கள் அமையும், விளையாட்டு முடிவுகளை ஒருவரால் கணிக்க முடியும் டாஸ் வெல்வது யார்? போட்டியில் வெல்லப்போவது யார், அடுத்த ஓவரில் எத்தனை ரன்கள் எடுக்கப்படும் என்பது போன்ற கேள்விகள் இருக்கும், உங்களது கிரிக்கெட் அறிவைப் பயன்படுத்தி உபரி மதிப்பெண் பெறலாம், ஒவ்வொரு நாளும் விளையாட்டு முடிந்தபின்னர், அந்தந்த நாள் போட்டி முடிவுகள் (முன்னணி வகிப்போர் அட்டவணை) வெளியிடப்படும்; அதாவது, ஒவ்வொரு நாளும் போட்டியின் (போட்டிகளின்) முடிவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

இந்த 52 நாள் காலகட்டத்தில் பங்கேற்பாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் வெற்றி பெற முடியும்; வெற்றிகளின் எண்ணிக்கைக்கு நடுவே எவ்வித இடைவெளியும் கிடையாது. நண்பர்கள், சகாக்கள், உறவினர்களை விளையாட அழைக்கலாம்; உங்களுக்கென்று தனியாக லீக் உருவாக்கி ஒருவரோடு ஒருவர் போட்டியிடலாம். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் உங்களது நிலைகளைப் பகிரலாம். ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்களது நண்பர்களை அழைத்து வருவதன் மூலமாக பூஸ்டர் புள்ளிகளை பெற முடியும் அல்லது வி செயலி மூலமாக ரீசார்ஜ் ஃ ரசீது கட்டணம் செலுத்துதலை மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு போட்டியின்போதும் அதிகமாக ஸ்கோர் செய்பவர்கள் தினசரி பரிசுகளையும், போட்டித்தொடர் முடிவில் அதிகபட்சமாக ஸ்கோர் செய்பவர்கள் பம்பர் பரிசுகளையும், குறைந்தபட்சமாக குறிப்பிட்ட புள்ளிகளைப் பெறுபவர்கள் குலுக்கல் முறையில் மெகா பரிசுகளையும் பெறுவார்கள். பம்பர் பரிசுகளாக போன், பைக், கார், லேப்டாப், ஸ்கூட்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும்.

தினசரி பரிசுகள்:

மைந்த்ரா, ஃப்ளிப்கார்ட், லென்ஸ்மார்ட், புமா, ஃபாஸோஸ், ஸொமட்டோ, க்யூர்பிட், க்ரோஃபர்ஸ், கோஐபிஐபிஓ மற்றும் இதர கூட்டு நிறுவனங்களில் இருந்து ஒருவர் தனது புள்ளிகளை மீட்டெடுக்க முடியும். தனித்த முயற்சியாக, போட்டி இடைவேளைகளின்போது வி ஃபேன் ஆஃப் தி மேட்ச் விளையாடி, ஐபோன்கள் உட்பட உற்சாகமூட்டும் பல பரிசுகளை வெல்ல தனது வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது வி.

மேலும் படிக்க