• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான அறிக்கையை தர நீதிமன்றம் உத்தரவு

July 19, 2018 தண்டோரா குழு

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பான அறிக்கையை விஷ்ணுபிரியாவின் தந்தை ரவிக்கு தர,கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும்,இவ்வழக்கை கைவிடுவது எனவும் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரிக்கப்பட்ட சாட்சிகள்,சிபிஐ அறிக்கை உள்ளிட்ட விவரங்களை ரவி கோரிய நிலையில், அவற்றை தருமாறு சிபிஐக்கு நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டார்.இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9 ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

மேலும் படிக்க