• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்திலை கைது செய்ய அக்டோபர் 4ஆம் தேதி வரை தடை

September 19, 2017

டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்திலை அக்டோபர் 4ஆம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.

தினகரனின் ஆதரவாளரான நடிகர் செந்தில், தன்னை விமர்சனம் செய்து மிரட்டல் விடுப்பது போல் பேசி வருவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி எம்.பி.குமார் காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கினை ரத்து செய்யக்கோரி நடிகர் செந்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, தினகரன் மற்றும் செந்திலை அக்டோபர் 4ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் படிக்க