• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாடா க்ரூஸிபிள் கார்ப்பரேட் குவிஸ் 2021 வினாடி – கோவை தி சென்னை சில்க்ஸ் யோகேஸ் பை வெற்றி

October 18, 2021 தண்டோரா குழு

இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் தரம் வாய்ந்த வர்த்தக விநாடி வினா போட்டியான, டாடா க்ரூஸிபிள் கார்ப்பரேட் குவிஸ் 2021 போட்டியின் 18-வது பதிப்பில் கிளஸ்டர் 6 இறுதி சுற்றில் கோவையில் உள்ள சென்னை சில்க்ஸ்சை சேர்ந்த யோகேஷ் பை வெற்றி பெற்றுள்ளார்.

ஆறு குழுக்களுக்கான விநாடி வினா போட்டியில் தமிழ்நாடு (சென்னை நீங்கலாக), கேரளா, அந்தமான் மற்றும் நிக்கோபர், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற போட்டியில் மிகவும் கடினமான பல கேள்விகள் இடம் பெற்றிருந்தன.கேரளாவில் உள்ள கொச்சியைச் சேர்ந்த தாஜ் மலபார் ரிசார்ட் மற்றும் ஸ்பா வின் பொது மேலாளர் சிபி மாத்யூ தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் காணொளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இறுதி சுற்றில் வெற்றி பெற்ற போட்டியாளருக்கு ரூ.35 ஆயிரம் பரிசுத் தொகையை பெறுவதுடன் தேசிய இறுதி சுற்றுப் போட்டிக்கும் தகுதி பெறுகிறார். க்யூ கலெக்டிவ் நாலெட்ஜ் சொலூசன்ஸ்சைச் சேர்ந்த ஜமீர் கேபி ரூ.18 ஆயிரம் பணப் பரிசை வென்று ரன்னர் அப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

புதிய இயல்பு நிலையினால் உருவான சவால்களுக்கு ஏற்ப டாடா க்ரூஸிபிள் கடந்த ஆண்டு மெய்நிகர் தளத்தில் ஆன்லைனில் போட்டியை நடத்தியது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் ஆன்லைனிலேயே போட்டிகள் நடத்தப்பட்டன.இதற்காக 12 கிளஸ்டர்களாக பிரிக்கப்பட்டன.இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட ஆன்லைன் சுற்றுகளுக்கு பிறகு ஒவ்வொரு 12 கிளஸ்டர்களிலிருந்தும் 12 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக இறுதி சுற்றில் பங்கேற்கச் செய்யப்பட்டனர்.

அதில் முதல் 6 போட்டியாளர்கள் 12 ஆன்லைன் கிளஸ்டர் இறுதி போட்டிகளில் பங்கேற்பர். அதில் ஒவ்வொரு 12 கிளஸ்டர் இறுதி சுற்றுகளிலிருந்தும் வெற்றி பெறுபவர்கள் அரையிறுதி மற்றும் இறுதியாக 6 வெற்றியாளர்கள் அக்டோபர் 2021 -ல் நடைபெறும் தேசிய இறுதி சுற்று போட்டிகளில் பங்கேற்பர்.இறுதி போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ.2.5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் டாடா க்ரூஸிபிள் வழங்கும் பதக்கமும் வழங்கப்படும். இந்தாண்டுக்கான பரிசுகள் டாடா க்ளிக் ஆதரவுடன் வழங்கப்பட இருக்கின்றன.

அனைத்து இறுதி போட்டிகளும் டாடா க்ரூஸிபிள் பேஸ் புக், டுவிட்டர், யூடியூப் ஆகிய ஆன்லைன் சேனல்களில் பல்வேறு தருணங்களில் ஒளிபரப்பு செய்யப்படும்.மிகவும் பிரசித்தி பெற்ற விநாடி வினா போட்டி மாஸ்டரான பிக்பிரெய்ன் கிரி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தனது நகைச்சுவையான பாணியில் போட்டிகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசுத் தொகை வரி வரம்புகளுக்கு உட்பட்டது.டாடா க்ரூஸிபிள் கார்ப்பரேட் குவிஸ் போட்டியின் இந்தாண்டுக்கான பரிசுகள் டாடா க்ளிக் ஆதரவால் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க