• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

December 7, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவை நேரில் விசாரிப்பது தொடர்பாக தமிழக உள்துறைக்கும், பெங்களூர் சிறைத்துறை அதிகாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகரையடுத்து அவரது மரணம் குறித்து, தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையம் இதுவரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் உள்ளிட்ட 130-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தியுள்ளது.

இந்நிலையில், சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது.இதற்காக, தமிழக உள்துறைக்கும், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிக்கும் விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கம் அளிக்க, பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா தரப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக 55 பக்கங்கள் கொண்ட பிரமானப் பத்திரம் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க