• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் கிருஷ்ண பிரியா ஆஜர்

January 2, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியா இன்று ஆஜரானார்

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை டி.டி.வி.தினகரன் ஆதரவளரான வெற்றிவேல் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கிடையில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட போது அதற்கு கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவிதந்திருந்தார்.

மேலும், அந்த வீடியோவை எடுத்தது சசிகலா என்று தெரிவித்த கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதா தனக்குப் பின்னால் இருக்கும் மருத்துவக் கருவிகளைப் பார்ப்பதற்காக அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும் இன்னும் பல வீடியோக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து,கிருஷ்ணப்பிரியாவுக்கு வீடியோ குறித்தும் ஜெயலலிதா சிகிச்சை குறித்தும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளதன் அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.இதையடுத்து இன்று அவர் விசாரனைக்கு ஆஜராகினார்.

மேலும் படிக்க