• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா பிறந்தநாளில் ஏழைக்குடும்பங்களுக்கு 2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

February 20, 2019 தண்டோரா குழு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் ஏழைkக்குடும்பங்களுக்கு 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏழைkக் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் ஏழைக்குடும்பங்களுக்கு 2,000 உதவித்தொகை வழங்குவதற்காக 1,200 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து கிராமங்களைச் சேர்ந்த 35 லட்சம் குடும்பங்களுக்கும், நகரங்களை சேர்ந்த 25 லட்சம் குடும்பங்களுக்கும் ரூபாய் 2,000 வழங்க திட்டம் என அறிவித்திருந்தனர்.

மேலும், இந்த மாத இறுதிக்குள் ஏழைக்குடும்பங்களூக்கு வங்கிக்கணக்கில் 2 ஆயிரம் செலுத்தப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் குடும்பங்களூக்கு வங்கிக்கணக்கில் தொகை செலுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், ஏழைkக்குடும்பங்களுக்கு வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.

மேலும் படிக்க