• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதம் திறக்கப்படும் – தமிழக அரசு

December 19, 2018 தண்டோரா குழு

மார்ச் மாதம் ஜெ. நினைவிடம் திறக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே நினைவிடம் கட்டப்படவுள்ளது. இதற்காக கடந்த ஜனவரி 10-ந் தேதி ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மே 7-ந் தேதி இந்த நினைவிடத்திற்காக அடிக்கல்லும் நாட்டப்பட்டு உள்ளது. பீனிக்ஸ் பறவை வடிவில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் முன் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், சென்னை மெரீனாவில், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைப்பதற்கு அதிகார வரம்புகளுக்குட்பட்டே முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவிடம் சட்ட விதிகளுக்குட்பட்டே கட்டப்படுகிறது என தெரிவித்துள்ளது.

மேலும், ஜெயலலிதாவின் நினைவிடம் மார்ச் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க