• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவி கேமரா நிறுத்தி வைக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி

March 22, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவி கேமரா நிறுத்தி வைக்கப்பட்டது என்று அப்போலோ மருத்துவ குழும தலைவர்   பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 5ம் தேதி காலமானார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,

சிசிடிவி காட்சிகளை சம்பந்தமில்லாதவர்கள் பார்க்க நேரிடும் என்பதால்,ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவி கேமரா நிறுத்தி வைக்கப்பட்டது.ஜெயலலிதாவை யார் சந்திக்க வேண்டும் என உடன் இருந்தவர்கள் கூறிய நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.ஜெயலலிதா உடல்நலம் தேறி வருவதற்கு அத்தனை சிகிச்சைகளையும் அப்போலோ மருத்துவமனை செய்தது.

மேலும்,ஜெயலலிதா சிகிச்சை சம்பந்தமான எல்லா தகவலையும் ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தில் கொடுத்துள்ளோம் என்று கூறினார்.

மேலும் படிக்க