• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு – மு.க ஸ்டாலின்

July 31, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதா எதிர்த்த அத்தனை மத்திய அரசின் திட்டங்களுக்கும் தற்போது தமிழக அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது என்று தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் புகார் கூறியுள்ளார்.

கதிராமங்லத்தில் போராட்டம் நடத்தி வரும் மக்களை மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

அதன் பின்னர் அவர் பேசியதாவது,

“கதிராமங்கலத்தில் ஆய்விற்காக மட்டுமே ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு தி.மு.க. ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் அந்நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தரப்பட்டது.

கதிராமங்கலத்தில் அறவழியில் போராடும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன்வரவில்லை. முன்னாள் தமழிக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசும் பிரதமர் மோடி தமிழக விவசாயிகளை பாராமுகமாக இருப்பது ஏன்? தமிழக விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த அத்தனை திட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் தயவில் தான் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

கதிராமங்கலத்தில் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.பெண்கள் முன்னின்று நடத்தும் இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்.மதச்சார்பற்ற மனிதராக விளங்கிய டாக்டர் அப்துல் கலாமிற்கு கூட மத்திய அரசு மதசாயம் பூசுவது வேதனை அளிக்கிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க