• Download mobile app
08 Aug 2025, FridayEdition - 3467
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜி ஸ்கொயர் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ற வகையில் வடிவமைத்துக் கொள்ளும் முன் மாதிரி வீட்டுமனை திட்டம்

August 8, 2025 தண்டோரா குழு

தென்னிந்தியாவின் மிகப்பெரிய, வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையைப் பெற்ற, சிறிய அளவிலான நிலங்களை ஒருங்கிணைத்து பெரும் பரப்பளவிலான நிலங்களில் முதலீடு செய்ய உதவும் வீட்டுமனை வர்த்தக நிறுவனமான ’ஜி ஸ்கொயர்’ வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ற வகையில் குடியிருப்புகளை வடிவமைக்கும் முன்மாதிரி திட்டத்தில் முன்னோடியாக முத்திரை பதித்துள்ளது.

தனிப்பட்ட நபர்களும் குடும்பங்களும் வீடுகளை வாங்கக்கூடிய தேர்வுமுறையைத் தொடர்ந்து ஜி ஸ்கொயரின் திட்டங்கள் மாற்றிவருகின்றன.‘உங்கள் இல்லம், உங்கள் கனவு, உங்கள் தேர்வு’ என்ற ஜி ஸ்கொயரின் பிராண்ட் உத்தரவாதத்தை உறுதிப்படுத்தும் வண்ணம், வாடிக்கையாளர்களின் பிரத்தியேகத் தேவைகளுக்கேற்ப வீட்டுமனைகளைத் தேர்வு செய்வதற்கு வழிவகை செய்துவருகிறது. ஜி ஸ்கொயர் அறிமுகப்படுத்திய இந்த முன்மாதிரி திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பைப் பெற்று வருகிறது.

வீடு கட்டுவதற்காக வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில், அவர்கள் விரும்பும் அளவிலான வீட்டுமனை, விருப்பத்திற்கேற்ற வகையில் வீட்டுமனையின் வடிவம், எந்த திசைப் பார்த்து இருக்க வேண்டுமென்ற வாய்ப்பு என தங்களது விருப்பங்களை வெளிப்படையாக தெரிவிக்கும் திட்டம் இப்போது வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

வாடிக்கையாளரின் விருப்பத்தைத் தெரிந்துகொண்டபிறகு ஜி ஸ்கொயர் அணியினர் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கனவை நனவாக்கும் வகையில் அவர்களுடன் ஆலோசித்துநெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்.ஜி ஸ்கொயருக்கான பிரத்யேக லே அவுட் வடிவமைப்புக் குழுவுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவையையும் பிரதிபலிப்பதுபோல திட்டம் அளிக்கப்பட்டு, ஒரு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த அணுகுமுறை மூலம், வாடிக்கையாளர்கள் அதிகபட்ச நிலப்பரப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி, ஒரு சிறப்பான வாழ்க்கைத்தரமுள்ள சமூகமாக வாழ்வதற்கு உருவாகும் வாய்ப்பு இவற்றுடன் வீட்டுமனைகளை வாங்குபவரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான ஒத்துழைப்பு என அனைத்தையும் ஜி ஸ்கொயர் சாத்தியப்படுத்தி வருகிறது.

வீட்டுமனைத் திட்டங்களில் இதுவரையில்லாத வகையில் வாடிக்கையாளர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வரும்முன்மாதிரி திட்டம் குறித்து, ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் பால ராமஜெயம் பேசும்போது, “எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் விருப்பம், நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களின் அபரிமிதமான ஆதரவுதான் இந்த வெற்றிகரமான பயணத்தை சாத்தியப்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட விருப்பத்துக்கேற்ற வகையில் வடிவமைத்துக் கொள்ளக்கூடிய குடியிருப்பு முன்மாதிரி திட்டத்தில் அவர்கள் காண்பிக்கும் உற்சாகமும் நம்பிக்கையும் எங்களது திட்டங்களை வடிவமைப்பதில் மேலும் பல புதுமைகளைப் புகுத்த உதவுகிறது, வீட்டுமனைகளை உருவாக்கும் எங்கள் தர அளவீட்டையும் தொடர்ந்து அதிகரிப்பதற்கு உதவுகிறது. வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் காண்பிக்கும் விருப்பம் என்பது சாதாரண் பரிவர்த்தனை மட்டுமல்ல. ஜி ஸ்கொயர் பிராண்டின் மீது வாடிக்கையாளர்கள் காட்டும் உத்தரவாதத்துக்கான உறுதிமொழியும்கூட.

இப்பின்னணியில் மதிப்புவாய்ந்த வகையில் இன்றைய தலைமுறை வாடிக்கையாளர்களின் தனிவிருப்பத்திற்கேற்ற வகையில் வீட்டைக் கட்டும் விருப்பத்தையும் ஜி ஸ்கொயரின் திட்டங்கள் மூலம் செயல்படுத்துவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்” என்றார்.

கோவையில் கோவில்பாளையம் மற்றும் கருமாத்தம்பட்டியில் இதே போன்று வாடிக்கையாளர்கள் வடிவமைக்கும் குடியிருப்புத் திட்டங்களை செயல்படுத்திவருகிறோம்.இந்த இரண்டு பிரீமியம் வில்லா திட்டங்களும் நகரத்துடன் சரியான இணைப்பில் உள்ளவை. சென்னையிலும் கோவையிலும் வளர்ந்துவரும் இத்திட்டங்களுக்கு அபரிமிதமான வரவேற்பு உள்ளது. ஏற்கெனவே 40-50% பேர் வாங்குவதற்கான முன்பதிவை செய்துவிட்டனர்.

மேலும் படிக்க