• Download mobile app
17 Oct 2026, SaturdayEdition - 3902
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜி.எஸ்.டி-யை அமல்படுத்த ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றம் கூடுகிறது

June 20, 2017 தண்டோரா குழு

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த ஜூன் 30-ம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல் தெரிவித்துள்ளார்.

ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி அமலுக்கு வரவுள்ளது. இதனை அமல்படுத்தும் விதமாக ஜூன் 30-ம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடும் எனவும் ஜூலை 1-ம் தேதி 12.10 மணி வரை இக்கூட்டம் நடைபெறும் எனவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் உரையாற்றுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்படவில்லை. இதனால் அந்த மாநிலங்களை தவிர மற்ற எல்லா மாநிலத்திலும் ஜி.எஸ்.டி நிறைவேற்றபடும் என்றார்.இந்த விழாவிற்கு மாநில முதல்வர்களுக்கு, நிதி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க