• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜி.என்.மில்ஸ் பாலம் நான்கு மாதங்களில் முடிக்கபடும் – டி.ஆர்.பி ராஜா

May 25, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் டி.ஆர்.பி ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்டத்தில் இரு நாட்களும் பல்வேறு இடங்கில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளபட்டோதடு ஏழு மணி நேரம் ஆய்வு கூட்டம் நடத்தபட்டுள்ளது.இரண்டு நாட்களாக பதிவான கருத்துக்களை சட்டமன்றத்தில் பதிவாகும் வரை வெளிப்படையாக கூற முடியாது.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பேருந்து வசதி குறித்த கோரிக்கைகள் தான் அதிகமாக வந்துள்ளது.

வனத்துறையில் வழங்கபட வேண்டிய அனுமதிகள் குறித்த பிரச்சனைகள், மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்ந்த புகார்கள் குறிப்பாக நொய்யலாற்றில் நிலவிவரும் மாசு தொடர்பான பிரச்சனைகள் வந்துள்ளன குடிநீர் மிகவும் குறைவாக கிடைப்பதால் அதை சரிசெய்யக்கூடிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தென்னை விவசாயிகளின் பிரச்னைகளில் ஒன்றான கொப்பரைத்தேங்காய் விலை வீழ்ச்சி குறித்து பேசி இருக்கிறோம்.

பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.பெரியநாயக்கன்பாளையம் பாலத்தை ஒன்பது மாதங்களில் கட்டிமுடிக்க அறிவுறுத்தபட்டிருக்கிறது.ஜி.என்.மில்ஸ் பாலம் நான்கு மாதங்களில் முடிக்கபடும்.கோவையில் இருந்து நாகப்பட்டினம் வரை உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்வதற்கு வழித்தடம் ஒன்றை தொழில்துறையினர் கேட்டுள்ளனர்.

முந்தைய காலகட்டங களில் பல்வேறு காரணங்களுக்காக 184 கோடி ரூபாய் மாற்றி செலவு செய்யப்பட்டிருக்கிறது தெரியவந்தது.எந்த நோக்கத்துக்காக பணம் வாங்கப்பட்டது அதற்காக இல்லாமல் வேறு பணிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது அதற்கான காரணங்களையும் கோவை மாநகராட்சி கூறியிருக்கிறது என்றார்.

மேலும் படிக்க