• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிஎஸ்டியால் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிலிண்டர் விலை உயர்வு

July 4, 2017 தண்டோரா குழு

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரியான ஜி.எஸ்.டி வரி விதிப்பு கடந்த 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 5% ஜி.எஸ்.டி. வரிவிதிக்கப்பட்டதை அடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. இதனால் டெல்லியில்14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டரின் விலை 446.65 ல் இருந்து 477.46 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டரின் விலை ரூ. 465.56 ஆக இருக்கும் என்று எண்ணைய் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஒரே நேரத்தில் 32 ரூபாய் உயர்வது 6 ஆண்டுகளில் இதுவே முதல்முறை ஆகும்.கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்வு காரணமாக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 50 வரை உயர்ந்தது. இதன்பிறகு தற்போதுதான் இந்த அளவுக்கு கடுமையாக மானிய விலை சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க