• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் ஹஜ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

August 3, 2017 தண்டோரா குழு

“ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பாக ஹஜ் வழிகாட்டுதல்” நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பாக ஆண்டு தோறும் இந்திய ஹஜ் வாரியம் மூலம் புனித மக்கா மற்றும் மதீனாவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கு தங்களது ஹஜ் கடமைகளை அதன் உயிரோட்டத்துடன் நிறைவேற்றிட உதவும் வகையில் “ஹஜ் வழிகாட்டுதல்” நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த வருடமும் கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்து இந்திய ஹஜ் வாரியம் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கு ஹஜ் வழிகாட்டுதல்” நிகழ்ச்சி கரும்புக்கடையிலுள்ள நூர் சேட் மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், “ஹஜ்ஜின் உயிரோட்டம்” எனும் தலைப்பில் மௌலவி. ஃபக்கீர் முஹம்மது பாகவி உரையாற்றினார். M. முஹம்மது இஸ்மாயி ஹஜ்ஜில் செய்யப்படும் வணக்க வழிபாடுகள் மற்றும் அதன் வழிமுறைகள் குறித்து விளக்கமாக காணொளி வடிவில் விளக்கமளித்தார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை மாவட்ட தலைவர் சையது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 200 ஹாஜிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க