• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பான் வழியாக சென்ற வட கொரியா ஏவுகணை

August 29, 2017 தண்டோரா குழு

வடகொரியாவின் ஏவுகணைகள் ஜப்பான் நாட்டின் வான்வெளியே கடந்து சென்றதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியா தன்னுடைய அணு ஆயுத சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது. மற்ற நாடுகளும் ஐநா சபையும் அந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், வட கொரியா தன்னுடைய சோதனையை கைவிடாமல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 28) ஜப்பான் நாட்டின் வான்வெளியே ஏவுகணை ஒன்று வானில் சென்றது. இதற்கு ஜப்பான் நாடும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

இந்நிலையில் ஏவுகணை செல்லும் வழியிலிருக்கும் வட ஜப்பான் பகுதியில் இருக்கும் மக்களும் ரயில் நிலையங்களிலிருக்கும் மக்களும் பத்திரமான இடத்தில் இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டது.

கடந்த 2௦௦9ம் ஆண்டு, வட கொரியாவின் ஏவுகணை ஜப்பான் நாட்டின் வழியாக கடந்தது. அது வெறும் விண்வெளி ராக்கெட் என்று வட கொரியா தெரிவித்தது. ஆனால், அந்த ராக்கெட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்று அமெரிக்காவும் ஜப்பானும் நம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க