• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘ஜன கன மன’ வில் திராவிடம் என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் அழியாது – கமல்

August 10, 2017 தண்டோரா குழு

‘ஜன கன மன’ வில் திராவிடம் என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் அழியாது என முரசொலி பவள விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

திமுகவின் அதிகார்பபூர்வ பத்திரிகையான முரசொலி பத்திரிகையின் 75வது ஆண்டு பவளவிழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், முரசொலி செல்வம், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, இந்து ராம், தினமலர் ரமேஷ், விகடன் சீனிவாசன், தினமணி வைத்தியநாதன் உள்ளிட்டு பலர் பங்கேற்றுவிழாவில் பேசினார்.

அப்போது விழாவில் பேசிய கமல்,

சிறுவயது முதலே திமுக தலைவர் கருணாநிதியின் ரசிகனாக இருந்து வருகிறேன். திராவிடம் அழிந்து விடும் என பலர் கூறிவருகிறார்கள் ‘ஜன கன மன’வில் திராவிடம் என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் அழியாது. நான் பூனுலே இல்லாத கலைஞன் இந்த விழாவில் பங்கேற்பதில் என்ன ஆச்சரியம். எனக்கு தற்காப்பு முக்கியம் அல்ல தன்மானம் தான் முக்கியம் எனவே தான் முரசொலி பவள விழாவில் பேச வந்தேன் எனக் கூறினார்.இந்த விழாவில் பார்வையாளராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க