• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சோமன்ஸ் லெய்சர்ஸ் அன்ட் டூர்ஸ் டிராவல்ஸ் கோவையில் புதிய கிளையை துவக்கியது

September 23, 2024 தண்டோரா குழு

கேரளாவில் முன்னணி சுற்றுலா நிறுவனமான சோமன்ஸ் லெய்சர்ஸ் டூர்ஸ் அன் டிராவல்ஸ் நிறுவனம்,27 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்தியாவில் 8 வது கிளையை கோவையில் இன்று துவக்கியது.

தென்னிந்திய அளவில் விரிவாக்க நடவடிக்கைக்கும், பயண அனுபவத்திற்கும் முக்கியமான ஒரு மைல்கல்லாக இது திகழ்கிறது.

சோமன்ஸ் லெய்சர்ஸ் டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.கே சோமன் பேசுகையில்,

“தென்னிந்திய அளவில் எங்களது விரிவாக்க நடவடிக்கையாக கோவையில் புதிய கிளையை துவக்குவது எங்களை பரவசமடையச் செய்கிறது.கோவையில் வசிக்கும் மக்களின் மறக்க முடியாத பயண அனுபவத்தை தரவும், அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதும் தான் எங்களது நோக்கம். பெரும் தொற்றுக்கு பின் சர்வதேச அளவில் சுற்றுலா பயணங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. ஐரேப்பா,அண்டார்டிகா கண்டங்களுக்கு செல்ல எங்களது பேக்கேஜ் மிகவும் நியாயமானதாகவும், அனைவருக்கும் ஏற்றதாகவும் இருக்கும்,” என்றார்.

கோயம்புத்துார் மக்களுக்கு புதிய சலுகை இப்போதே துவங்குகிறது.2025 ம் ஆண்டு அன்டார்டிகா செல்ல புக்கிங் செய்யும் பயணிகளுக்கு அடுத்து வரும் 10 நாட்களுக்கு ஒருவருக்கு ஒரு லட்ச ருபாய் தள்ளுபடி சலுகை தரப்படுகிறது.

கூடுதல் சிறப்பம்சங்கள்:

டோர் டூ டோர் சேவை: கோவை மக்களின் சிரமம் இல்லாத அனுபவத்தை பெற சோமன்ஸ் லெய்ஸர்ஸ் டூர்ஸ் அன்ட் டிரவல்ஸ் வீட்டிற்கே வந்து அழைத்துச் செல்கிறது.

மாத தவணை: உலகை சுற்றிப்பார்க்க விரும்புவோருக்கு நிதியுதவி அளித்து, மாத தவணையில் செலுத்தும் தேர்வையும் சோமன்ஸ் லெய்சர்ஸ் டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் வழங்குகிறது.

•ஐரோப்பாவிற்கு சிறப்பு கவனம்: இந்தியாவிலிருந்து ஐரோப்பா செல்லும் பயணிகளின் எண்ணக்கையை கருத்தில் கொண்டு, சிறப்பு பேக்கேஜ், அளவான செலவு திட்டத்தில் இந்த கம்பெனி அறிமுகம் செய்துள்ளது.

•வெற்றிடத்தை நிரப்புதல்: உயர்தரமாகவும் இருக்க வேண்டும், அதேசமயம், அனைவராலும் செலவிடும் இருக்க வேண்டும் என்ற இரண்டுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து, தனித்துவமிக்க சுற்றுலா பயண திட்டத்தை சோமன்ஸ் டூர்ஸ் கோவை மக்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
சோமன்ஸ் டூர்ஸ் அன்ட் டிரவால்ஸ், சிறப்பான பெயரை பெற்றுள்ளதோடு, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கும் மேலாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நம்பகமிக்க சுற்றுலா இயக்குனர் விருதை பெற்றுள்ளதோட,புதிய கிளையையும் கோவையில் துவக்கியுள்ளது.புதுமையான முறையில், நம்பிக்கை மிக்க நிறுவனமாக தென்னகத்தில் வளர்ச்சி பெற உறுதி ஏற்றுள்ளது.

நிறுவனர் சோமன், 26 ஆண்டுகள் இந்த தொழிலில் அனுபவம் பெற்றவர். சுற்றுலா மற்றும் டிரவல்ஸ் துறையில் ஆழ்ந்த அறிவும் பெற்றுள்ளார். எஸ்ஓடிசி டிரவால் லிமிடெட் நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றிய பின் சோமன், இந்த சுற்றுலா நிறுவனத்தை துவக்கினார். சிறப்பாக செயல்படுத்துவதிலும், புதுமையை புகுத்துவதிலும் தொடர்ந்து செயல்பட்டார்.
“தனித்துவமிக்க சுற்றுலா அனுபவத்தை தருவதில் தான் எங்களது வெற்றி உள்ளது. எங்களது குழுவினர்,சிறப்புமிக்க எதிர்பார்க்கும் அதிகமானதை தரும் நிகழ்ச்சிகளை உருவாக்கித்தருகின்றனர். அவர்களது ஒவ்வொரு பயணமும், மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்,” என்கிறார் சோமன்.

மேலும் படிக்க